தமிழர் நலக் கழகம் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா
தமிழர் நலக் கழகம், மயூர் விஹார் பேஸ்-3, தில்லி, 14.04.2024 அன்று தமிழ் புத்தாண்டு [ குரோதி வருடம் ] மற்றும் சித்திரைத் திருநாள் விழா நிகழ்ச்சியை விநாயகர் கோவில் வளாகத்தில் சிறப்பாக நடத்தியதுமீனா வெங்கி தலைமை ஏற்று தமிழ் புத்தாண்டு / சித்திரை திருநாள் மற்றும் தமிழ் கலாச்சாரம் குறித்தும், மாணவமணிகளுக்கு அறிவுரையும் ஆலோசனையும் வழங்கினார். டாக்டர் ராம் சங்கர் (உச்ச நீதி மன்ற வழக்கறிஞர்), கோபாலகிருஷ்ணன் (பொது செயலாளர், ஆதி சங்கர சேவா சமாஜ்) சிறப்புரை ஆற்றினர்.தமிழ் வகுப்பு மாணவமணிகள் தங்கள் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர்.பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மீனா வெங்கி, டாக்டர் ராம் சங்கர் வழங்கினர்.தமிழ் ஆர்வலர்களும் தமிழ் கலாச்சாரம் குறித்து பேசினர். அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்படடது. விழா ஏற்பாடுகளை நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செவ்வனே செய்திருந்தார்கள். - நமது செய்தியாளர் மீனா வெங்கி