உள்ளூர் செய்திகள்

நொய்டாவில் விசாகா ஹரியின் ஹரி கதா காலக்ஷேபம்

ஹரிகதா என்பது "இறைவனுடைய கதை" என்று பொருள்படும், நற் கதைகளின் மூலம் ஆன்மீக மற்றும் பக்தி சாரத்தை எடுத்துக்காட்டுவதாக இது ஹரி கதா காலக்ஷேபம் என்றும் அழைக்கப்படுகிறது. இது "ஹரியின் கதைகளைக் கேட்க நேரத்தை செலவிடுவது" என பொருள்படும் ஆழ்ந்த கலாச்சார, தார்மீக மற்றும் ஆன்மீக குறிப்புகள் வெளிப்படுத்த உரிய பாடல்கள், நிகழ்வுகள் மற்றும் மென்மையான நகைச்சுவை ஆகியவற்றால் செறிவூட்டப்பட்ட தெய்வீக கதைகள் விவரிக்கும் நிகழ்வே இந்த நிகழ்ச்சி ஆகும். நொய்டா மற்றும் என்.சி.ஆர் பிராந்தியத்தில் உள்ள பக்தர்கள் ஆன்மீக நலன் நாடி, விசாகா ஹரியின் 'ஹரி கதா காலக்ஷேபம்' நடைபெற்றது. வயலினில் எடபள்ளி அஜித் மற்றும் மிருதங்கத்தில் அர்ஜுன் கணேஷ் ஆகியோர் இணைந்து இந்நிகழ்வு அக்டோபர் 11,நொய்டா, வி எஸ் எஸ் சார்பில் செக்டர் 42, நொய்டா சங்கர மடத்தில் புனிதமான சூழலில் நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் VSS தலைவர் சுரேஷ் வரவேற்றார். சீதா அரவிந்த் வி எஸ் எஸ் சார்பில் நன்றி கூறினார்.விசாகா ஹரியின் தனித்துவமான பாணி - நகைச்சுவை, பக்தி மற்றும் பாரம்பரிய மதிப்புகளின் அனைவரையும் வசீகரிக்கும் வகையில் கதையை கலப்பது - அவரது ஹரி கதா காலக்ஷேபம் ஒரு தெய்வீக அனுபவம் போற்றப்படுகிறது. இந்நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருப்பொருள், “நரசிம்மா க்ஷேத்ரங்கள் ." விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களில், நரசிம்ம அவதாரம், மிக அழகான மற்றும் இரக்கம் உள்ளவராக மதிக்கப்படுகிறார். இவ் அவதாரம் , பக்தர்களுக்கு எல்லையற்ற அருளையும் பேரின்பத்தையும் அருளுகிறது. முன்னதாக, காலையில் மகா கணபதி ஹோமம், தொடர்ந்து சுப்ரபாதம், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், மற்றும் ரெங்கநாதருக்கு திருமஞ்சனம் நடந்தது. விசாகா ஹரி அவர்களின் தெய்வீக அனுபவத்தை கேட்க வந்த அனைத்து பக்தர்களுக்கும் வி எஸ் எஸ் நிர்வாகம் நன்றி தெரிவித்தது. இளம் தலைமுறையினரும் காண முடிந்தது. வி எஸ் எஸ், கடந்த முப்பது ஆண்டுகளாக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் வாராந்திர குழு பாராயணத்தை தடையின்றி நடத்தி வருகிறது மட்டுமல்லாமல், இது போன்ற ஆன்மீக மற்றும் கலாசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பக்தர்கள் நலன் நாடி பல்வேறு சேவைகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.- புதுடில்லியிலிருந்து எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !