உள்ளூர் செய்திகள்

மகராஷ்டிரா கவர்னருக்கு வாழ்த்து

நவிமும்பை தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகள் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை கவர்னர் மளிகையில் சந்தித்தனர். வரும் 9ஆம் தேதியன்று நடைபெற உள்ள துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நவிமும்பை தமிழ்ச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துமடலையும், பூங்கொத்தையும், புத்த்கத்தையும் வழங்கி அவருக்குப் பொன்னாடை போர்த்தி சங்கத்தின் பாராட்டுதல்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். நவிமும்பை தமிழ்ச்சங்கத்தின் நல்வாழ்த்துகளுக்கு கவர்னர் நன்றி தெரிவித்தார்.- தினமலர் வாசகர் மீனாட்சி வெங்கடேஷ், செயலாளர், நவிமும்பை தமிழ்ச்சங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்