உள்ளூர் செய்திகள்

தெலுங்கானா முதல்வருடன் தெலுங்கானா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

தெலுங்கானா தமிழ்ச் சங்கம் நிர்வாக குழு தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியைச் சந்தித்து, தெலுங்கானா மாநிலத்தில் வாழும் தமிழர்களின் நலன் மற்றும் கலாச்சார முன்னேற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை சமர்ப்பித்தது. இதில் தமிழ் இல்லம் (Tamil Bhavan) அமைத்தல், தமிழ் மொழி மற்றும் கல்வி வளர்ச்சிக்கு அரசு ஆதரவு, தமிழர் நலத்திட்டங்கள் மற்றும் தமிழ் கலாச்சார நிகழ்வுகளுக்கு ஊக்குவிப்பு போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் தமிழ்ச் சங்க ஆதரவாளர் பி.என். ரெட்டி உடன், துணைத் தலைவர் தருமசீலன், பொதுச் செயலாளர் எஸ். ராஜ்குமார், பொருளாளர் என். நேரு சாஸ்திரி செயற்குழு குழு உறுப்பினர்கள் சரவணன், ஜெயபிரகாஷ், பிரபு விஜயன், சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். சந்திப்பிற்குப் பிறகு பொதுச் செயலாளர் ராஜ்குமார் அவர்கள் கூறியதாவது: “தமிழர் நலனுக்காகவும், தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் தெலுங்கானா அரசாங்கம் காட்டும் அக்கறைக்கு நன்றி. தமிழர் சமூகத்தின் தேவைகளை அரசிடம் நேரடியாக தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையாகும்.” முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தமிழ்ச் சங்கத்தின் பணிகளை பாராட்டி, தமிழர் நலனுக்கான முயற்சிகளில் அரசாங்கம் முழு ஆதரவையும் அளிப்பதாக உறுதி அளித்தார். இச்சந்திப்பு, தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையையும், கலாச்சார மரபுகளையும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும். Email: telanganatamizhsangam@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !