உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல குவிந்த மக்கள் கூட்டம்

13-01-2024 | 16:23


மேலும் இன்றைய போட்டோ

ஐரோப்பாவில் வீசும் கடும் குளிர்காலக் காற்றினால் பால்டிக் கடலின் கடற்கரை பகுதிகள் உறைந்து பனிக்கட்டியாக மாறியுள்ள சூழலில், ஜெர்மனியின் ஷார்பியூட்ஸ் நகரில் பலத்த காற்றையும் பொருட்படுத்தாமல் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்.

04-02-2026 | 22:29


ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவல்பூர் நெடுஞ்சாலை ஓரத்தில் சாலை பணிக்காக கொட்டப்பட்ட 60 ஆண்டுகள் பழமையான அரச மரம், செங்காடு ஏரிக்கரையில் மீண்டும் நடப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

04-02-2026 | 22:29


அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் உள்ள போபிடோரா வனவிலங்கு சரணாலயத்தில், பனிமூட்டம் சூழ்ந்த ஒரு குளிர்கால காலை வேளையில் யானைகளுடன் செல்லும் பாகன்கள்.

04-02-2026 | 22:29


மத்திய அரசு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் துவங்கும் முன், வந்திருந்தவர்களுக்குக் கட்சி கரை போட்ட துண்டுகள் வழங்கப்பட்டு, பக்காவாகப் புகைப்படம் எடுக்கப்பட்டது. கோஷங்கள் அடக்கி, ஆர்ப்பாட்டம் ஒரு வழியாக முடிந்த உடன் தொண்டர்களின் தோளில் இருந்த துண்டுகள் அவசர அவசரமாக திரும்பப் பெறப்பட்டன. கேட்ட போது அடுத்த ஆர்ப்பாட்டத்துக்கு வேண்முல்ல… என்றனர். உருவிய துண்டுகளுடன் காங்கிரஸ் தொண்டர்.

04-02-2026 | 22:28


விழுப்புரம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விளைபொருட்கள் எடுக்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

04-02-2026 | 21:06


பொழுது சாய்ந்ததும் ஓய்வெடுக்க செல்லும் சூரியன் இடம் கவுல் பஜார்

04-02-2026 | 21:06


கும்பாபிஷேகம் நடக்க உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் தங்க கோபுரம் இரவில் மின் ஒளி அலங்காரத்தில் ஜொலித்தது.

04-02-2026 | 21:05


அ.திமு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொதுச் செயலாளர் பழனிசாமி, துணை தலைவர் முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வேலுமணி.

04-02-2026 | 17:21


அ.திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொதுச் செயலாளர் பழனிசாமி.இடம் : ராயப்பேட்டை.

04-02-2026 | 17:21