உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், தாராபுரம் ரோடு மைய தடுப்பில் தனியார் பங்களிப்புடன் போலீசார் ஒளிரும் விளக்குகள் வைத்துள்ளனர்.

13-03-2024 | 21:21


மேலும் இன்றைய போட்டோ

பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி கோவில் திருவிழாவில் தெய்யம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

22-01-2026 | 08:22


ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் புதிய கட்டடத்திற்கு ஆதார் மையம் மாற்றப்பட்ட நிலையில் அந்த கட்டடத்தில் பழைய நில எடுப்பு தனி வட்டாட்சியர் பெயர் பலகை அகற்றப்படாமல் இருந்தது. இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதை அடுத்து பழைய பெயர் பலகையை அகற்றி, ஆதார் சேவை மையத்தின் பெயர் மாற்றி அமைக்கப்பட்டது.

22-01-2026 | 08:16


காசிமேடில் விசைப்படகு ஒன்று பழுது பார்க்கும் பணியின் போது திடீரென ஒருபுறம் சாய்ந்தது. சுதாரித்த மீனவர்கள் காலி பேரல்களில் தண்ணீரை நிரப்பி மறுபகுதியில் அடுக்கி மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் படகை சமநிலைக்கு கொண்டு வந்தனர்.

22-01-2026 | 08:10


அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ளார். அவரை பதவியிலிருந்து நீக்க கோரி ஹூஸ்டனில் போராட்டம் நடைபெற்றது. அப்போது நடைபாதையில் சாக்பீசால் எதிர்ப்பு வாசகத்தை எழுதிய இளைஞர்.

22-01-2026 | 08:05


பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின விழா, சென்னை லோக் பவனில் நடந்தது. இதில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளில் இந்த மயில் நடனமும் ஒன்று.

22-01-2026 | 07:57


ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் ஹெலிகாப்டர் டாக்சி சேவை துவங்கப்பட்டது. சுற்றுலா பயணியரின் வசதிக்காகவும், அவசர மருத்துவத் தேவைகளுக்காகவும் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது.

22-01-2026 | 06:38


மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கின் தியோலாலியில் நடந்த 'எக்சர்சைஸ் தோப்சி 2026' பயிற்சியில், நம் ராணுவத்தின் பீரங்கிப் படை தன் பிரமாண்ட வலிமையை நிரூபித்தது. 38 கி.மீ., தூரம் வரை இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் உடைய உள்நாட்டு தயாரிப்பான தனுஷ் பீரங்கியை சோதித்து பார்த்தது.

22-01-2026 | 06:30


சென்னை காசிமேடு கடலில் விசைப்படகு சாய்ந்து கடல்நீர் உட்புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

22-01-2026 | 06:02


குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை அவினாசி ரோடு பி.ஆர்.எஸ். , மைதானத்தில் ஒத்திகையில் ஈடுபட்ட போலீசார்.

21-01-2026 | 22:07