உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தேனி அருகே அம்மச்சியாபுரத்தில் நெல் அறுவடைக்கு பின் வைக்கோல் கட்டுகளை மாட்டு தீவனத்திற்கு ஏற்றுமதி செய்தனர்.

05-04-2024 | 20:34


மேலும் இன்றைய போட்டோ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது. ஏரியில் சூழ்ந்துள்ள பனிக்கு நடுவே படகு சவாரி செய்த சுற்றுலா பயணியர்.

18-10-2026 | 08:11


நாட்டின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 31ல் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கர்நாடகாவின் ஷிவமொக்காவில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பங்கேற்ற மாணவியர் போதைக்கு எதிரான பதாகைகளை ஏந்தி சென்றனர்.

18-10-2026 | 08:00


ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, சென்னை பாரிமுனை பூக்கடை பகுதியில் பூக்கள் வாங்குவதற்காக குவிந்தவர்கள்.

18-10-2026 | 07:54


ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில் விலை உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. பிளேஸ் டி லா ரிபப்ளிக் சதுக்கத்தில் தீ வைக்கப்பட்ட கட்டடம்.

18-10-2026 | 07:51


ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை இணைக்கும் போக்குவரத்து வழித்தடமான சோஜிலா கணவாய் கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான பகுதியில் அமைந்துள்ளது. பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்.

18-10-2026 | 07:45


பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது சமுதாயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் மிஷன் சக்தி 6.0 இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்ற பெண் போலீசார். இடம்: காஜியாபாத், உபி.

18-10-2026 | 07:38


வண்டலூர் உயிரியல் பூங்காவில் மரக்கிளையில் சாய்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் நீலகிரி லங்கூர் குரங்கு.

18-10-2026 | 07:23


மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள பிரபல துர்கா பூஜை பந்தலில் திடீரென ஏற்பட்ட அதிகப்படியான மக்கள் நெரிசல் மற்றும் மழை காரணமாக வெளியேறும் பலர் இறந்துள்ளனர்.பந்தலுக்கு வெளியே சிதிறிக்கிடக்கும் காலணிகள்

17-10-2026 | 23:58


மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அறிமுகப்படுத்தப்பட உள்ள விஸ்டாடோம் பெட்டி மாதிரி படம்.

17-10-2026 | 22:54