உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

அதிகாலையில் கையில் செல்லப்பிராணியுடன் உற்சாகமாய் நடைபயிற்சி செய்யும் பெண். இடம் : பெசன்ட் நகர்.

20-05-2024 | 18:24


மேலும் இன்றைய போட்டோ

கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் போதை இல்லாத விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேரு ஸ்டேடியத்தில் இருந்து துவங்கியது.

14-09-2025 | 17:23


திருப்பூர், பாளையக்காடு, ராஜ்மாதா நகரில் உள்ள ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகள்.

14-09-2025 | 17:23


ஜிஎஸ்டி குறித்த விளக்கக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் என்ற புத்தகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியிட்டார். சென்னை மக்கள் மன்ற நிர்வாகி சுந்தர்ராமன் பெற்று கொண்டார் (இடமிருந்து) ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணை தலைவர் சக்திவேல், ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி மற்றும் பலர்.

14-09-2025 | 15:31


புதுச்சேரி தமிழ் சங்கத்தில் திருவள்ளுவர் உலக சாதனையாளர்கள் அமைப்பு சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருதினை தலைவர் முத்து வழங்கினார்.

14-09-2025 | 15:29


உடுமலை ஐஸ்வர்யாநகர் ஸ்ரீ கற்பக விநாயகர், கஜவல்லி. வனவல்லி சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாலய நிகழ்ச்சி நடந்தது.

14-09-2025 | 10:42


கோவை மாநகர தி.மு.க., சார்பில் மசக்காளிபாளையத்தில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்கள்.

14-09-2025 | 10:42


வடகிழக்கு மாநிலமான மிசோரமில் புதியதாக துவங்கப்பட்ட பைராபி-சாய்ராங் ரயில் பாதை, பசுமை போர்த்திய வயல்களின் நடுவே வளைந்து, நெளிந்து செல்லும் பாதைகளின் மேல் அமைந்துள்ளது. இந்த தடத்தில் ரயிலில் பயணிப்பது புதிய அனுபவத்தை தரும். இது மொத்தம் 8,070 கோடி ரூபாய் மதிப்பில் 51.38 கி.மீ., தூரத்துக்கு கட்டப்பட்டுள்ளது.

14-09-2025 | 08:04


திருநெல்வேலியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கோடை காலத்தை விட அதிகமாக உள்ளது. வெயிலில் இருந்து தப்பிக்க சுத்தமல்லி தடுப்பணையில் தாமிரபரணி தண்ணீரில் உற்சாகமாக குளித்தவர்கள்.

14-09-2025 | 07:56


பிளாஸ்டிக் கழிவு நிறைந்த குளத்தில் உணவு தேடும் பெயிண்டர் ஸ்டாக் பறவைகள். இடம் கோவை சிங்காநல்லூர் குளம்.

14-09-2025 | 07:49