உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கள்ளச்சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசை கண்டித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

24-06-2024 | 18:37


மேலும் இன்றைய போட்டோ

ஐரோப்பிய நாடான இத்தாலியின் சிலிலான் நகருக்கு அருகே சமீபத்தில் வீசிய புயலால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மலைப்பகுதியில் 4 கி.மீ., தூரத்துக்கு 65 அடி அகலத்துக்கு உள்ள நிலம் சரிந்து கிடக்கும் காட்சி. இதையடுத்து 50 அடி அகலமுள்ள பகுதி பாதுகாப்பற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டு, 1,500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

29-01-2026 | 09:26


ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் பாவனா மெமோரியல் டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஏழை எளியவர்களுக்கான இலவச திருமண விழாவில் 36 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. விழாவில் செல்பி எடுத்து மகிழ்ந்த மணப்பெண்கள்.

29-01-2026 | 08:38


கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த அஜிதா, 46, என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த துயரமான நேரத்திலும் உறுப்பு தானத்திற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததால், ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. அஜிதாவின் குடும்ப உறுப்பினர்களை நேரில் வரவழைத்த கவுரவித்த மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். இடம்: திருவனந்தபுரம்.

29-01-2026 | 08:34


விழுப்புரம் சாலா மேடு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கவுரவ விரிவுரையாளர்கள் கருப்பு துணி கட்டி தர்ணாவில் ஈடுபட்டனர்.

28-01-2026 | 22:51


வாளையார் சோதனை சாவடியில் கேரளாவை சேர்ந்த நிபின் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

28-01-2026 | 22:44


புதுச்சேரி நகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு லைசென்ஸ் வழங்கும் முகாமில், தனது செல்ல நாயுடன் வரிசையில் காத்திருந்த நாய் வளர்ப்பவர்கள்.

28-01-2026 | 19:54


பாசனத்திற்காக உடுமலை திருமூர்த்திஅணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

28-01-2026 | 19:54


சென்னை வில்லிவாக்கம் ஏரியில், கட்டப்பட்டு வரும் பசுமை பூங்காவின் முக்கிய அம்சமான கண்ணாடி பாலம் பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.

28-01-2026 | 19:54


வளர்ப்பு நாய்களுக்கு லைசன்ஸ் பெற புதுச்சேரி நகராட்சி அலுவலகமான கம்பன் கலை அரங்கில் நாய் வளர்ப்பவர்கள் கூட்டம் அலைமோதியது.

28-01-2026 | 19:53