உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூர் ஆல்ப்பேட்டை செக்போஸ்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

11-08-2024 | 00:11


மேலும் இன்றைய போட்டோ

கொச்சின் ஷிப்ட்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் மங்களோர்,இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்:மும்பை,மகராஷ்ட்ரா

12-10-2026 | 19:36


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வழங்கிய 63 இருசக்கர ரோந்து வாகனங்களை கமிஷனர் அமல்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இடம்: கமிஷனர் அலுவலகம்.வேப்பேரி

12-10-2026 | 19:32


கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழாவை ஒட்டி சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கர்நாடக இசை பாடகி உமா குமாரின் இசை நிகழ்ச்சி நடந்தது.

12-10-2026 | 19:31


படம் கிஷன்செய்தி ஜெயபிரகாஷ் சென்னை செனாய் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டை சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்திறந்து வைத்தார். உடன் இடமிருந்து- அமைச்சர்கள் வெங்கட்ரமணன், ராஜ்மோகன், கனிமொழி எம்.எல்.ஏ, லுலு ஹைப்பர் மார்க்கெட் குழுமத்தின் தலைவர் யூசப் அலி, அண்ணாநகர் எம்.எல்.ஏ ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் .

12-10-2026 | 19:16


வறண்ட நிலத்தில் வருணன் கருணையால் வான்மழை பொழிந்தது. புதைந்த விதையில் இருந்து தரை பிளந்து தலைதுாக்கும் பசும்புல் கண்டு, தலைகுனிந்து மேய்ந்தன நாட்டு மாடுகள். இடம்: வாடிப்பட்டி அருகே கட்டக்குளம்.

12-10-2026 | 19:12


மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட மரகதம் குமரவேல்,முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார் இடம்:தலைமைச் செயலகம்,சென்னை.

12-10-2026 | 19:06


சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

12-10-2026 | 18:38


எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று நோய்கள் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். இடம் :கலைவாணர் அரங்கம், சென்னை.

12-10-2026 | 18:37


எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழை அமைச்சர் அருண்ராஜ் வழங்கினார். இடம் :கலைவாணர் அரங்கம், சென்னை.

12-10-2026 | 18:37