உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

இன்னாப்பா இது ! குடியிருப்புல மழைநீர் குட்டை ; சென்னை ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கேணி இணைப்புச் சாலை ராயல் என்கிளேவ் பகுதியில் மழைநீர் குட்டை குட்டையாக ஆங்காங்கே ஏங்கி நிற்கிறது பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அப்பகுதியில் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். சென்னை மாநகராட்சி 194 வது வார்டின் அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்போர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

11-08-2024 | 12:18


மேலும் இன்றைய போட்டோ

வேல் வாங்கும் முருகன், கற்பக விநாயகர் கோயில், கே.கே.நகர், மதுரை.

13-10-2026 | 19:37


நவராத்திரி விழாவை முன்னிட்டு உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

13-10-2026 | 19:37


உடுமலை ஸ்ரீ வர்ஷினி டிவிஎஸ் நிறுவனத்தின், 36வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 3 நாட்கள் நடந்த கலை மற்றும் பண்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீ வர்ஷினி நிர்வாக இயக்குனர் இளங்கோ, இணை நிர்வாக இயக்குனர் அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

13-10-2026 | 19:36


கர்நாடகாவின் ஷிவமொக்காவில் மகிளா தசரா விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.பெண்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பைக் கவுரவிக்கவும் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பெண் கலைஞர்கள் மட்டுமே பங்கேற்பர்.அவர்களின் நாட்டுப்புற கலை வடிவமிது.

13-10-2026 | 19:36


புதுச்சேரி சாய் ப்ரைமஸ் பயோ டெக் லிமிடெட் நிறுவனர் சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

13-10-2026 | 18:49


விருத்தாசலம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம்.

13-10-2026 | 18:48


பருவ மழை தொடங்க உள்ள நிலையில் சாலையோரங்களில் உள்ள முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் நெடுஞ்சாலைத்துறையால் தீவிரமாக நடைபெற்று வருகிறது இடம் ஜி.எஸ்.டி சாலை பெருங்களத்தூர்

13-10-2026 | 18:48


கிருஷ்ணா நதி நீர் தொடர்பாக பேசுவதற்கு ஆந்திரா சென்றுள்ள தமிழக முதல்வர் விஜயை,அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

13-10-2026 | 18:48


மதுரை கோரிப்பாளையம் – மீனாட்சி கல்லுாரி ரோட்டோரத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.

13-10-2026 | 18:48