இன்றைய போட்டோ
ஸ்ரீ தியாகபிரம்ம கான சபா சார்பில் 13வது ஸ்ரீ ஜெயந்தி இசை நிகழ்ச்சி-2024 நேற்று துவங்கியது. இதில் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேடையில் (இடமிருந்து - வலம்) வாணி மஹால் தலைவர் டெக்கான் மூர்த்தி, துணை தலைவர் சந்திரசேகர், விருதாளர்கள் வாய்ப்பாட்டு கலைஞர் சந்தீப் நாராயண், பரதநாட்டிய கலைஞர் பினேஷ் மகாதேவன், விருதுகளை வழங்கிய சிட்டி யூனியன் பவுண்டேஷன் தலைவர் பாலசுப்பிரமணியன், விருதாளர் நாடக கலைஞர் ரத்னம் கூத்தபிரான், மிருதங்க கலைஞர் மற்றும் மிருதங்க கலைஞர் சுதின்தரா.இடம்: தி.நகர்.
25-08-2024 | 01:51
மேலும் இன்றைய போட்டோ
காவல் ஆய்வாளரை கண்டித்து நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.இடம் : சைதாப்பேட்டை
12-10-2026 | 20:05
கிண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் மேற்கூரை பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்.இடம் : கிண்டி
12-10-2026 | 20:03
பூந்தமல்லி - துறைமுகம் வரை கூவம் ஆற்றின் வழியே இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைப்பதற்கான பில்லர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இடம் : எழும்பூர்
12-10-2026 | 20:03
நடைபாதை முதல் நடுரோடு வரை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் இடம்: மதுரை தத்தநேரி வைகை சர்வீஸ் ரோடு.
12-10-2026 | 19:38
கொச்சின் ஷிப்ட்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் மங்களோர்,இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்:மும்பை,மகராஷ்ட்ரா
12-10-2026 | 19:36
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வழங்கிய 63 இருசக்கர ரோந்து வாகனங்களை கமிஷனர் அமல்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இடம்: கமிஷனர் அலுவலகம்.வேப்பேரி
12-10-2026 | 19:32
கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழாவை ஒட்டி சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கர்நாடக இசை பாடகி உமா குமாரின் இசை நிகழ்ச்சி நடந்தது.
12-10-2026 | 19:31
சென்னை செனாய் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டை சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்திறந்து வைத்தார். உடன் இடமிருந்து- அமைச்சர்கள் வெங்கட்ரமணன், ராஜ்மோகன், கனிமொழி எம்.எல்.ஏ, லுலு ஹைப்பர் மார்க்கெட் குழுமத்தின் தலைவர் யூசப் அலி, அண்ணாநகர் எம்.எல்.ஏ ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் .
12-10-2026 | 19:16