இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம், இணைந்து வழங்கும் பதில் சொல் ; பரிசை வெல் வினாடி - வினா நிகழ்ச்சி, திருப்பூர் பி. என். ரோடு, ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுடன் இடமிருந்து பட்டம் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, முதல்வர் சுரேஷ்குமார், துணை முதல்வர் காஞ்சனா.
28-11-2024 | 13:35
மேலும் இன்றைய போட்டோ
நவராத்திரி விழாவை முன்னிட்டு உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
13-10-2026 | 19:37
உடுமலை ஸ்ரீ வர்ஷினி டிவிஎஸ் நிறுவனத்தின், 36வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 3 நாட்கள் நடந்த கலை மற்றும் பண்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீ வர்ஷினி நிர்வாக இயக்குனர் இளங்கோ, இணை நிர்வாக இயக்குனர் அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
13-10-2026 | 19:36
கர்நாடகாவின் ஷிவமொக்காவில் மகிளா தசரா விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.பெண்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பைக் கவுரவிக்கவும் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பெண் கலைஞர்கள் மட்டுமே பங்கேற்பர்.அவர்களின் நாட்டுப்புற கலை வடிவமிது.
13-10-2026 | 19:36
புதுச்சேரி சாய் ப்ரைமஸ் பயோ டெக் லிமிடெட் நிறுவனர் சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
13-10-2026 | 18:49