உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், நஞ்சராயன் குளத்தில் அதிகளவு தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

28-12-2024 | 14:33


மேலும் இன்றைய போட்டோ

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் உயர் அழுத்த மின்கோபுரம் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

11-06-2026 | 21:43


தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே 36 அடி உயரமுள்ள குண்டாறு அணை நிரம்பியது.

11-06-2026 | 21:43


சென்னையில் வெயிலின் தாக்கம் இருப்பதால், கோயம்பேடு மார்க்கெட்டில் சிறிய தர்பூசணி பழங்கள் கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

11-06-2026 | 21:42


மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு

11-06-2026 | 21:41


செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11-06-2026 | 21:41


சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இடம்; சென்ட்ரல்.

11-06-2026 | 21:40


கொளுத்தும் வெயிலில் வெப்பத்தை தாங்காமல் கோவில் குளத்தில் குளித்து சூட்டை தணிக்கும் புறாக்கள். இடம் : திருவான்மியூர்

11-06-2026 | 21:39


சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் சார்பில் பயிற்றுவிக்கப்பட்ட 9வது இசைக் கலைஞர்களின் பாஞ்சாரி மேளம் அரங்கேற்றம் நடந்தது.

11-06-2026 | 21:39


ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில், எஸ். பி., பிருந்தா சிங்கப்பெண் போலீஸ் படையை துவக்கிவைத்து அறிவுரை கூறினார்.

11-06-2026 | 21:38