இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது வரும் நிறைவடைந்ததை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் தொழில் பாதுகாப்பு படையினர் வந்தே மாதரம் பாடலை பாடினர்.
07-11-2025 | 15:59
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட ஹாக்கி அகாடமியின் நூறாவது ஆண்டு விழாவையொட்டி நடந்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
07-11-2025 | 15:59
கடைசியில என்னையும் தட்ட தூக்க வச்சிட்டீங்க...திருப்பூர் நகருக்குள் போதிய மேய்ச்சல் நிலங்கள் இல்லாததால், ஆடுகள் குப்பையில் கிடந்த பாக்கு மட்டை தட்டை எடுத்து செல்கின்றன. இடம்: மங்கலம், ரோடு.
07-11-2025 | 15:59
அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர், அமராவதி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டுச் செல்வது காண்பதற்கு ரம்யமாக உள்ளது. இடம்: உடுமலை, கல்லாபுரம்.
07-11-2025 | 07:58
ஊட்டி பந்தலூரில் இருந்து சேரம்பாடி செல்லும் சாலையில், சேரம்பாடி மின்வாரிய எதிரே பயணிகள் நிழற்குடை புதருக்குள் மறைந்துள்ளதால், பயணியருக்கு பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
07-11-2025 | 07:53
மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், பெருத்த பொருட் சேதம் ஏற்பட்டது.
07-11-2025 | 07:48
ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு, காஞ்சிபுரம் நெமந்தகார தெரு, பழனி முருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
07-11-2025 | 07:43