உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரி மாநிலம் ஆரோவில் உதய தினத்தை முன்னிட்டு மாத்திர் மந்திர் பகுதியில் உள்ள ஆம்பி தியேட்டரில் பல்வேறு நாட்டினர் ஒன்று கூடி தீ மூட்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.

28-02-2025 | 11:54


மேலும் இன்றைய போட்டோ

தமிழக அரசை கண்டித்து அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

06-02-2026 | 22:11


சமூக களப்பணிக்கான நிதி பங்களிப்பை கொடுக்காததை கண்டித்து சென்னை பல்கலை வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

06-02-2026 | 22:11


கோவை ரேஸ் கோர்சிலுள்ள ஶ்ரீ சத்ய சாய் மந்திரில், பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளீஸ் 2 மாணவர்களுக்கான ஸ்ரீ லட்சுமி ஹயகிரீவர் ஹோமம் நடத்தப்பட்டது.

06-02-2026 | 22:11


திருநெல்வேலி மாவட்டம் கூந்தன் குளம், வடக்கு கழுவூர் பறவைகள் சரணாலயப் பகுதிகளுக்கு மணிமுத்தாறு தண்ணீர் வராததால் குளங்கள் காய்ந்து கிடக்கின்றன உணவின்றி வெளிநாட்டு பறவைகள் பரிதாபமாக இறக்கின்றன...

06-02-2026 | 22:10


திருமுருகன்பூண்டி, செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம் ஊர்வலம் நடந்தது.

06-02-2026 | 22:10


தே.மு.தி.க விருப்பமனு விநியோகம் துவங்கிய நிலையில், விருப்பமனு வாங்குவதற்காக பேண்டு வாத்தியங்களுடன், குத்தாட்டம் போட்டபடி வந்த கட்சியினர். இடம் : கோயம்பேடு

06-02-2026 | 22:10


திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு தமிழக முதல்வரால் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக திறந்துவைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்.

06-02-2026 | 22:09


வேடர் பரித் திருவிழாவை முன்னிட்டு சென்னை பூங்கா நகரில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோவிலில் இருந்து ஊர்வலமாக ராயபுரம் சென்ற உற்சவர் முத்துக்குமாரசாமி மயில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

06-02-2026 | 22:09


கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடற்கூறு ஆய்வகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்திய போலீசார்.

06-02-2026 | 22:08