இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மற்றும் லட்சுமி செராமிக்ஸ் இணைந்து நடத்திய மகளிர் மட்டும் நிகழ்ச்சி கோவை நவஇந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதை (இடமிருந்து) பி.ஆர்.ஜே., ஆர்த்தோ சென்டர் ஒருங்கிணைப்பாளர் லலிதா, லட்சுமி செராமிக்ஸ் இணை நிர்வாக இயக்குனர் கற்பகம், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஷர்மிளா, இந்துஸ்தான் கல்வி குழும நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
16-03-2025 | 20:16
மேலும் இன்றைய போட்டோ
மாட்டுப் பொங்கலையொட்டி அலங்கரிக்கப்பட்ட மாடுகள் வழிபாட்டிற்காக கோவை தடாகம் ரோடு மாதேஸ்வரன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன.
16-01-2026 | 22:48
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
16-01-2026 | 22:47
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் மாட்டுப் பொங்கலை யொட்டி பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து உணவு அளித்த பொதுமக்கள்.
16-01-2026 | 17:05
பெரம்பூர் மேம்பாலத்தின் கீழ் பகுதி, புனரமைக்கப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன
16-01-2026 | 17:05
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.
16-01-2026 | 17:01