இன்றைய போட்டோ
'சவுபாக்யா' நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள 'ஸ்ரீ 2.0' எனும் கிரைண்டரை, அந்நிறுவன இயக்குநர்கள் வரதராஜன், பாலசுப்பிரமணியம், 'வசந்த் அண்டு கோ' பங்குதாரர்கள் தமிழ்செல்வி வசந்தகுமார், தங்கமலர் ஜெகநாதன் ஆகியோர், தியாகராய நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள 'வசந்த் அண்டு கோ' கிளையில் அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், நடிகை ரவீணா, நிறுவன நிர்வாகிகள் சண்முகம், கிரீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
23-04-2025 | 10:45
மேலும் இன்றைய போட்டோ
வடகிழக்கு மாநிலமான அசாமின் கோலாகாட்டில் உள்ள காசிரங்கா புலிகள் காப்பகம் பருவமழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் சுற்றுலா பயணியருக்காக நேற்று முதல் திறக்கப்பட்டது.
04-10-2026 | 06:43
ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனை முன்னிட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள டேலியா மலர் செடிகளை ரசித்த சுற்றுலா பயணியர்.
04-10-2026 | 06:36
ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்; டி 20 கிரிக்கெட்டில் தங்கம் கைப்பற்றிய உற்சாகத்தில் இந்திய அணியினர். இடம்: ஜப்பான்.
04-10-2026 | 06:32
தேசிய வனவிலங்கு வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நடந்த வனவிலங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விலங்குகள் போல வேடமணிந்து பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவியர்.
04-10-2026 | 06:25
இயற்கையின் பேரழகை சுமந்து நிற்கும் சுற்றுலா தலமான கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் மூணாறில் நிகழும் சூரிய உதய காட்சி காண்போரை பரவசப்படுத்தும்; இது நேற்று அதிகாலை நிகழ்ந்த சூரிய உதயம். இடம்: பெரியகானல்.
04-10-2026 | 06:18
மேட்டூர் அணை நீர்மட்டம், 74 (முழு கொள்ளவு 120 அடி)அடியாக குறைந்ததால், சேத்துக்குழி நீர்பரப்பு பகுதியில் மூழ்கியிருந்த, புனித சவேரியார் ஆலய கோபுர முகப்பு, 6 அடி அளவில், நீருக்கு வெளியே தெரிந்தது
03-10-2026 | 22:56
மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். உடன், வேட்பாளர். இடம்:மதுராந்தகம்.
03-10-2026 | 21:56