இன்றைய போட்டோ
சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் நடந்த விழாவில் நான் முதல்வன் திட்டம் மற்றும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின். உடன் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் கயல்விழி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் பிரகாஷ் , அரசு தலைமைச் செயலர் முருகானந்தம்.
26-04-2025 | 13:56
மேலும் இன்றைய போட்டோ
போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மீன் பிடி துறைமுகங்களில் டீசல் மற்றும் காஸ் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மீனவர்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இடம்: காசிமேடு மீன்பிடி துறைமுகம்.
17-03-2026 | 07:28
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் கூடும் இடங்களில் கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திருநெல்வேலி பழைய பஸ் நிலையம் அருகே நடந்த கலைநிகழ்ச்சி.
17-03-2026 | 07:22
மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து தனியாக பிரித்து ஆந்திரா உருவாக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த, சுதந்திர போராட்ட தியாகி பொட்டி ஸ்ரீ ராமுலுவின் 58 அடி உயர வெண்கல சிலையை மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். இடம்: அமராவதி.
17-03-2026 | 07:12
தேர்வு செய்தும் பணி ஆணை வழங்காததை கண்டித்து டாக்டர்கள் சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள பொது சுகாதாரத்துறை அலுவலகத்தைமுற்றுகையிட்டனர்.
16-03-2026 | 22:16
கடலூரீ திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாதாரனை நடந்தது.
16-03-2026 | 22:16
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அறையில் பெயர் பலகை மாற்றப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி என பெயர் மாற்றப்பட்டுள்ள.
16-03-2026 | 22:16