இன்றைய போட்டோ
நீர்வளத்துறைக்கு சொந்தமான 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தாங்கல் ஏரி மேம்பாட்டு பணிகள் சிறுதுளி என்ற தன்னார்வ அமைப்பு மூலம் நடத்தப்பட்டு வருகிறது.ஏரியை முழுவதும் தூர்வாரி அதனை சுற்றி நடைபாதை, இருக்கைகள், மின்விளக்குகள் மற்றும் 2000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மேலும் ஏரியின் உள்ளே இரண்டு இடத்தில் அடர் வனம் அமைத்து பறவைகள் தீவாகவும் மாற்றப்பட உள்ளது இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : சோழிங்கநல்லூர்.
25-06-2025 | 21:25
மேலும் இன்றைய போட்டோ
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் தாகம் தீர்த்து, பச்சை பசலென காணப்பட்ட திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை திருமூர்த்தி அணை, போதிய மழையின்றி, தன் ஈரத்தன்மையையே இழந்து நிற்கிறது. மதகுகளை முத்தமிட்டு அலையடித்த நீர் வற்றிப்போய், விரிசலடைந்த அணைப்பகுதி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியிருப்பது உழவர் பெருமக்களின் நெஞ்சில் சோகத்தை விதைத்துள்ளது.
07-10-2026 | 23:11
சென்னை அருகே, வண்டலுார் ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் உயர் பயிற்சியகத்தில், பயிற்சி முடித்த டி.எஸ்.பி.,க்களுக்கான பதக்கங்களை, முதல்வர் விஜய் நேற்று வழங்கினார். அப்போது, பயிற்சி டி.எஸ்.பி., ஆனிஷ் பிரதீபுக்கு, வீர வாளை உறையிலிட்டு கவுரவித்தார்.
07-10-2026 | 23:11
சென்னை பூந்தமல்லி பைபாஸ் சாலை முதல் வடபழனி வரைவிலான சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் முதல் வழித்தடம் அக்டோபர் 11, அன்று தொடங்க உள்ளது. இதன் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் கலந்து கொள்கின்றனர். பூந்தமல்லி மெட்ரோ நிலையத்தின் வான்வழித் தோற்றம்.
07-10-2026 | 23:11
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
07-10-2026 | 23:11
மாடுகளை பூட்டி வண்டியில் பாரம் ஏற்றிய மட்டைகளை வித்தாதான் இவர்களுக்கு ஜீவனம். கணவர் வண்டி ஓட்ட, கொளுத்தும் வெயிலில் மனைவி முக்காடு போட்டி அம்பாரத்தின் மீது அமர்ந்திருக்க, வாழ்க்கை சக்கரத்தை உருட்டுகின்றனர். இடம்: ஆனைமலை ரோடு, பொள்ளாச்சி.
07-10-2026 | 23:11
கூடலூர் அருகே, பசுமை வனப்பகுதி இடையே அமைந்துள்ள தேயிலை தோட்டம்; வளைந்து செல்லும் இரு மாநில சாலை ஓரங்களில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பகல் நேரத்திலும் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
07-10-2026 | 23:11