இன்றைய போட்டோ
இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நினைவு பரிசை வழங்கினார். உடன் இடமிருந்து வலம் - மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சார்யா சுவாமிகள் மற்றும் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல தேசிக அடிகளார்.
28-06-2025 | 12:05
மேலும் இன்றைய போட்டோ
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு அசாம் மாநிலத்தில் இருந்து பிஜிலி என்ற 5 வயது பெண் யானை வந்தது. மடத்தில் உள்ள மையத்தில் யானை பராமரிக்கப்படும் என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
26-09-2026 | 08:57
அனந்த் சதுர்தசி தினத்தில் விநாயகர் விசர்ஜனம் எனப்படும் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்தது. அதில் வண்ணப்பொடிகள் தூவி கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை.
26-09-2026 | 08:52
புதுச்சேரி உள்ளாட்சித் துறை தூய்மை பாரத இயக்கம்-நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் கீழ் கம்பன் கலை யரங்க வளாகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான கோலப்போட்டி நடந்தது.
25-09-2026 | 14:28
ஆபத்தான நிலையில் சாலையை கடக்கும் பொதுமக்கள்.இடம்: தே.மு.திக அலுவலகம் அருகே,கோயம்பேடு .
25-09-2026 | 14:25