இன்றைய போட்டோ
காற்று மாசை குறைக்க, காற்று தர மேலாண்மை ஆணையம் வெளியிட்ட உத்தரவின்படி, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க டில்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டில்லி மாநகரின் பெட்ரோல் நிலையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
02-07-2025 | 10:44
மேலும் இன்றைய போட்டோ
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிசான நெல் சாகுபடிக்காக தங்களது விவசாய நிலங்களை தயார்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்... இடம் வடக்கு செழியநல்லூர்.
31-10-2025 | 19:54
திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை, இடுவாய் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கால்நடைகளுடன் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31-10-2025 | 13:49
மழை பெய்து ஓய்ந்த நிலையில், மகிழ்ச்சியில் சிறகு விரிக்கும் புறாக்கள். இடம்: ரேஸ்கோர்ஸ், கோவை.
31-10-2025 | 07:04
கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்தில் சீமை கருவேல மரங்களுக்கு இடையே தேங்கியுள்ள மழைநீர்.
31-10-2025 | 07:01
நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு பிறகு பசுமைக்கு மாறிய வனம் சூழ்ந்த, மலைகளின் நடுவே அருவியில் வரும் வெள்ளம் வெள்ளி கீற்றாக காட்சியளிப்பது, சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. இடம்: குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதை எதிரே உள்ள பகாசூரன் மலை.
31-10-2025 | 06:59
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் அரசு கொள்முதல் செய்து அடுக்கி வைத்துள்ள பல நெல் மூட்டைகள் நனைந்து முளைப்பு ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளதை, புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் ஆய்வு செய்தார்.
31-10-2025 | 06:54