இன்றைய போட்டோ
திருவண்ணாமலையில் பழைய அரசு மருத்துவமனை அருகே ரு 2 கோடி 50 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சமுதாயக் கூடம் திறப்பு விழா நிகழ்ச்சி முடிந்த பிறகு, புதிய கட்டிடம் முன் தோரணங்கள் மற்றும் வாழை தாரில் உள்ள பழங்களை சிறுவர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போட்டி போட்டு கொண்டு பிடிங்கி சென்றனர்.
13-07-2025 | 20:05
மேலும் இன்றைய போட்டோ
நவராத்திரி பூஜை அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதையொட்டி நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்காக ஒத்திகையில் ஈடுபட்ட பெண் நடனக் கலைஞர்கள். இடம்: ஆமதாபாத், குஜராத்.
04-10-2026 | 22:24
ஜப்பானில் 16 நாட்களாக நடந்த ஆசிய விளையாட்டு போட்டி நேற்று நிறைவு பெற்றது. விழா அணிவகுப்பில் மூவர்ணக்கொடி ஏந்தி வந்த இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா.
04-10-2026 | 22:23
தாராபுரம், வீரமாச்சிமங்கலம் பிரிவில் முதல்வர் விஜய் ரோடு ஷோ பாதையில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் செய்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினரை போலீசார் குண்டுகட்டாக அகற்றினர்.
04-10-2026 | 22:23
சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான சோலையாறு பிர்லா நீர்வழித்தடத்தில் மழைப்பொழிவு குறைந்த நிலையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
04-10-2026 | 22:23
மழையை காணோம்... குளங்களெல்லாம் வற்றி வருகிறதே என கலங்கிப் போயிருக்கும் இன்றைய நிலையில் சற்றே ஆறுதல் அளிக்கிறது இந்த தடுப்பறை. இடம்: கோவை, பெருமாள்கோவில்பதி
04-10-2026 | 22:23