உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டி புதுமந்து பாரஸ்ட்கேட் பகுதியில், தூர் வாரப்படாமல் உள்ள தடுப்பணை .

22-07-2025 | 08:40


மேலும் இன்றைய போட்டோ

ஒடிஷாவின் புவனேஸ்வரில் உள்ள ஏகம்ரா கானன் பூங்காவில் 'மலர் கண்காட்சி- 2026' கோலாகலமாக துவங்கியது. இதில், ஒடிஷாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், மலர்களால் உருவாக்கப்பட்ட புரி ஜெகன்நாதர் ரத யாத்திரை அலங்காரம், பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

11-01-2026 | 06:37


தினமலர் நாளிதழ் மற்றும் தி கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், மார்கழி கோலத் திருவிழா செல்வபுரம் பிராவிடன்ட் கிரீன் பார்க் அப்பார்ட்மெண்டில் நடந்தது.

11-01-2026 | 04:29


சென்னை பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி மாணவியர், பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.

10-01-2026 | 12:13


பொங்கல் பண்டிகையையொட்டி கண்களை கவரும் விதமாக வண்ணம் பூசிய விதவிதமான பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இடம்: வள்ளூவர் கோட்டம், சென்னை.

10-01-2026 | 12:12


தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசுடன் ஹெச்.டி ஹூண்டாய் நிறுவனம் அண்மையில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தென் கொரியாவில் அந்நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தை தமிழக உயர்நிலை குழு நேரில் பார்வையிட்டது. நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா. இடம்: உல்சான், தென்கொரியா.

10-01-2026 | 09:47


ஆதவன் உதிக்கும் காலை நேரத்தில், பனிப்போர்வை போர்த்திய ஆழியாறு அணையின் ஒட்டுமொத்த தோற்றம், பனோரமா காட்சியில் ரம்மியமாக காட்சியளித்தது.

10-01-2026 | 08:46


ஊட்டி அருகே எமரால்டு அணைக்கு தண்ணீர் செல்லும் போர்த்தியாடா நீர்பிடிப்பு பகுதி வறண்ட நிலையில் உள்ளதால், கோடையில் பல பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

10-01-2026 | 08:42


கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தில் நடந்த தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து கை அசைத்தார்.

10-01-2026 | 06:06


கோவை கிக்கானிக் பள்ளியில் நடந்த எப்போ வருவாரோ நிகழ்ச்சியில் ஆதி சங்கரர் குறித்து சொற்பொழிவாற்றிய குரு ஞானாம்பிகா .

09-01-2026 | 21:53