மேலும் இன்றைய போட்டோ
ஸ்டான்லி மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பழைய சோறு எனும் மாரத்தான் ஓட்டம் சென்னையில் நடந்தது. இடம்: பெசன்ட் நகர்
08-02-2026 | 10:11
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் ரீல்ஸ் எடுக்க நடனமாடி மகிழ்ந்தனர்.
08-02-2026 | 08:20
நம் ராணுவத்தின் தெற்கு படை நடத்திய விழாவில் நாட்டின் பாதுகாப்புத் திறனை பறைசாற்றும் வகையில் அதிநவீன ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை அணிவகுத்து நின்றன. இடம்: ஆமதாபாத், குஜராத்.
08-02-2026 | 08:18
தமிழக வனத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து, கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மணல் சிற்ப போட்டியை பாலவாக்கம் கடற்கரையில் நடத்தின. இதில் பங்கேற்று மணல் சிற்பங்களை செய்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர்.
08-02-2026 | 08:14
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துவக்க விழாவில் ஜெட் சூட் வீரர் வான் வழியாக பறந்து கோப்பையை அறிமுகப்படுத்தினார். தொழில்நுட்பமும் விளையாட்டு உணர்வும் இணைந்த இந்த நிகழ்வு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
08-02-2026 | 07:43
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடும் குளிர் நிலவுகிறது. அங்குள்ள தால் ஏரியில் படகில் செல்லும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் ஓயாமல் உழைத்த படகுகள் ஓய்வெடுக்கின்றன.
08-02-2026 | 07:36