உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி நிறைவு மணிவிழாவையொட்டி பல்வேறு காய்கறிகள் பழங்களால் தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

09-09-2025 | 19:46


மேலும் இன்றைய போட்டோ

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், முன்னோர்களுக்கு திதி மற்றும் சடங்குகள் செய்யும் ‘பித்ரு பட்சம்’ நிகழ்வின் ஒரு பகுதியாக, ராஜேந்திர பிரசாத் படித்துறையில் திரண்டிருந்த மக்கள்.

03-10-2026 | 17:46


ராஜஸ்தான் மாநிலம் பிகானரில், தேசிய வனவிலங்கு வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற வனவிலங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், விலங்கு போல வேடமணிந்து பங்கேற்ற பள்ளி சிறுவர்களில் ஒருவன்

03-10-2026 | 17:46


ராஜபாளையம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நற்பவி கிரியேட்டர்சின் ராட்டினங்களுடன் கூடிய கடல்கன்னி,வண்ணமீன்கள் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

03-10-2026 | 17:34


கடலுார், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

03-10-2026 | 17:04


புரட்டாசி 3ம் சனிக்கிழமையொட்டி, திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் பழ அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவர் சுவாமி.

03-10-2026 | 17:04


மதுரை அரசு மருத்துவமனை ரோட்டை பிரமாண்டமாக அகலப்படுத்தினாலும், ‘நடைபாதை நடப்பவர்களுக்கானது’ என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அதிகாரிகள் மறந்து, நடைபாதையை கடைபாதையாக மாற்றி பொதுமக்களை மீண்டும் ரோட்டில் நடக்க விடுகின்றனர்.

03-10-2026 | 16:52


புரட்டாசி மாத மூன்றாவது வார சனிகிழமையான நேற்று ஏரிவாய் மணவாள பெருமாள் மலர் அலங்காரத்தில், கருடவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

03-10-2026 | 15:14


க.விலக்கு - கண்டமனூர் ரோட்டில் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதி அருகே பட்டு போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது.

03-10-2026 | 15:04


'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின், 118வது பிறந்த நாளையொட்டி, இன்று( அக்டோபர் 02) அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவரது பேரனும், ' தினமலர் ' ஆசிரியருமான டாக்டர் கி.ராமசுப்பு. இடம்: ' தினமலர்' தலைமை அலுவலகம், ராயப்பேட்டை, சென்னை.

02-10-2026 | 22:28