உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

இந்தோனேஷியா-ஜகார்த்தா புறநகர் பகுதிகளில் டெபெர்க் என்ற இடமும் ஒன்று. அங்கு பறவைகள் குறிப்பாக மகாவ் போன்ற வண்ணமயமான கிளிகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது, பயிற்சி கொடுப்பது என்ற கலாசாரம் பிரபலமாக உள்ளது. படத்தில் இருக்கும் அல்பி அல்வார் ராம்லி போன்ற பறவைக் காதலர்கள், கிளிகளை சாகசங்கள் செய்யவும், கட்டளைகளை ஏற்கவும், மக்களுடன் பழகவும் பயிற்சி அளித்து அதன் மூலம் வருமானம் பார்க்கின்றனர்.

17-09-2025 | 06:59


மேலும் இன்றைய போட்டோ

கோடை விடுமுறையொட்டி, கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

21-05-2026 | 22:49


கோவையில் பல ரோடுகள் இன்னும் இந்த நிலைமையில் தான் உள்ளது. இடம்: கோவில்மேடு.

21-05-2026 | 18:44


சத்திய ஞான சபையில் புனித பூமி ஆலோசனை குழு சார்பாக வடலூர் புனித நகரமாக வேண்டி அகவல் பாராயண பிரார்த்தனை நடைபெற்றது.

21-05-2026 | 18:44


விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.

21-05-2026 | 18:43


வீடு வழங்க கோரி 250 குடும்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்:கலெக்டர் அலுவலகம்,பாரிமுனை.

21-05-2026 | 18:42


சென்னை கார்னர் மாளிகையில் பதவி ஏற்று கொண்ட அமைச்சர் மரிய வில்சனுக்கு கவர்னர் அர்லோக்கர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் உடன் முதல்வர் விஜய்.

21-05-2026 | 18:41


பனைமர ஓலையின் நுனியில் தனது மாளிகையை தானே நேர்த்தியாக கட்டும் தூக்கணாங்குருவிகள்.. இடம்: மணப்படைவீடு, திருநெல்வேலி..

21-05-2026 | 18:39


தாம்பரம் கிஷ்கிந்தா சாலை குறுகிய சாலையாக இருப்பதால் நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படும் வாகன ஓட்டிகள்

21-05-2026 | 18:39


புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு கால தாமதம் ஆவதால், அமைச்சர்கள் பயன்படுத்திய அரசு கார்கள் பயன்பாட்டிற்கு வராமல் சட்டசபை அருகில் உள்ள சர்க்கிள் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

21-05-2026 | 18:38