உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை குறிச்சி சிட்கோ தொழில்பேட்டையில் புதிதாக கட்டப்பட உள்ள தங்க நகை பூங்காவின் மாதிரி வரைபடம்.

09-10-2025 | 19:12


மேலும் இன்றைய போட்டோ

விருத்தாசலத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு நகர பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

09-10-2025 | 18:04


கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,791.23 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

09-10-2025 | 12:33


கோவை கணபதி பகுதியில் யு டேர்ன் வசதி அகற்றப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.

09-10-2025 | 07:58


ஹிமாச்சலில் கடும் பனிப்பொழிவு காரணமாக, லாஹூல்- ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள மணாலி - லே தேசிய நெஞ்சாலை மூடப்பட்டுள்ளதால், வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன.

09-10-2025 | 07:51


சென்னை ஐஐடி வளாகத்தில் புதிதாக பிறந்த தன் குட்டியுடன் இரை தேடி சுற்றித் திரிந்த பிளாக் பக் எனப்படும் புல்வாய் மான். இடம்: கிண்டி

09-10-2025 | 07:33


உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் நம் விமானப்படையின் 93வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் நடந்த அணிவகுப்பில் பங்கேற்ற வீரர்கள்.

09-10-2025 | 07:33


திருப்பூர் எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை கல்லூரியில் கலைத் திருவிழா நடந்தது. அதில் கிராமிய நடன போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.

08-10-2025 | 20:25


தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலையில் தேயிலைத் தோட்டங்கள், நீர்த்தேக்கத்தை சூழ்ந்துள்ள வெண் பனி கூட்டம் மனதை வருடும் வண்ணம் ரம்யமாக காட்சியளித்து.

08-10-2025 | 19:54


சில தினங்களாக பெய்த மழையால் உழவு பணி முடிந்து மக்காச்சோளம் பயிரிட தயார் நிலையில் உள்ள விவசாய நிலம்.இடம்:விருதுநகர் அருகே தாதம்பட்டி.

08-10-2025 | 19:05