உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

நச்சுத்தன்மை உடைய இருமல் மருந்தை குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தால் நாடே கலங்கிப்போயிருக்கிறது. ஆனால் இப்போது தான் மருந்தாய்வாளர்கள் மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இடம்: சிந்த்வாரா, மத்திய பிரதேசம்

12-10-2025 | 08:38


மேலும் இன்றைய போட்டோ

கடற்படை போலீசார் சென்னை காசிமேடு கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

17-04-2026 | 14:28


சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.இடம்: சென்னை துறைமுகம் ஜீரோ கேட்டு சாலை, காசிமேடு.

17-04-2026 | 14:28


திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு, தபால் ஓட்டு பதிவு, திருப்பூர் டவுன்ஹாலில் நடந்தது. தபால் ஓட்டு செலுத்த வரிசையில் காத்திருந்த போலீசார்.

17-04-2026 | 14:28


தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். இடம்: காந்திபார்க், கோவை.

17-04-2026 | 14:27


ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு , எராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

17-04-2026 | 14:27


ஓட்டு சாவடியில் மாற்று திறனாளிக்கு உதவும், கல்லூரி மாணவிகளுக்கு, வீல் சேர் பயன்படுத்தும் முறை குறித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பயிற்சியளிக்கப்பட்டது.

17-04-2026 | 14:26


உடுமலையில் பிரசாரம் செய்ய துணை முதல்வர் உதயநிதியை பார்க்க வந்த தொண்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு தண்ணீர் பாட்டில்களை வாங்கினர்.

17-04-2026 | 14:26


உடுமலையில் தி.மு.க. வேட்பாளர்கள் ஜெயக்குமார் மற்றும் மடத்துக்குளம் தொகுதி ஜெயராமகிருஷ்ணனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.

17-04-2026 | 14:26


திருப்பூர், பி.என் ரோடு, சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

17-04-2026 | 14:25