இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தீபாவளி பொருட்கள் வாங்கியாச்சு கூட்டத்தில் டூ வீலரை மெதுவாக ஓட்டுங்க..இடம்:திருப்பூர்,புது மார்க்கெட் வீதி.
13-10-2025 | 06:46
இலவசமாக அளிக்கப்பட்ட யோகா பயிற்சியில் பங்கேற்றவர்கள். இடம்: லாஸ்பேட்டை ஏர்போர்ட் மைதானம், புதுச்சேரி.
12-10-2025 | 11:43
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் துவாரபாலகர் சிலைகளுக்கு பொருத்தப்பட்ட கவசத்தில் இருந்து தங்கம் மாயமான விவகாரத்தை கண்டித்து முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கேரள இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை துரத்தி பிடித்து கைது செய்த போலீசார். இடம்: கொச்சி
12-10-2025 | 08:48
நச்சுத்தன்மை உடைய இருமல் மருந்தை குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தால் நாடே கலங்கிப்போயிருக்கிறது. ஆனால் இப்போது தான் மருந்தாய்வாளர்கள் மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இடம்: சிந்த்வாரா, மத்திய பிரதேசம்
12-10-2025 | 08:38
திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ள காவல்கிணறு பகுதி, காற்றாலை நகரம் போல காட்சி அளிக்கிறது. அங்கு உயரமான காற்றாலைகள், சுழலும் வெள்ளை இறகுகள் ஒன்றிணைந்து தனித்துவமான இயற்கை காட்சியை உருவாக்குகின்றன.
12-10-2025 | 07:12