இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருவாலங்காடு ஒன்றியம் எல்.வி.புரம் கொசஸ்தலையாற்று நீர் வழித்தடத்தில், போக்குவரத்து போலீசார் பேரிகேட் வைத்து உள்ளனர். நீரோட்டத்தை திருப்பி விட வைக்கப்பட்டு உள்ளதாக, அப்பகுதி மக்கள் கிண்டலடித்து செல்கின்றனர்.
13-10-2025 | 10:01
போலியோவில் இருந்து பாதுகாக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சொட்டு மருந்து முகாம் நடந்தது. மேற்குவங்கத்தின் நாடியாவில் நடந்த முகாமில் ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்த மருத்துவ பணியாளர்.
13-10-2025 | 09:52
தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள் வாங்க கோவை பெரிய கடை வீதியில் திரண்ட பொதுமக்கள்.
13-10-2025 | 09:45
தீபாவளி பொருட்கள் வாங்கியாச்சு கூட்டத்தில் டூ வீலரை மெதுவாக ஓட்டுங்க..இடம்:திருப்பூர்,புது மார்க்கெட் வீதி.
13-10-2025 | 06:46
இலவசமாக அளிக்கப்பட்ட யோகா பயிற்சியில் பங்கேற்றவர்கள். இடம்: லாஸ்பேட்டை ஏர்போர்ட் மைதானம், புதுச்சேரி.
12-10-2025 | 11:43
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் துவாரபாலகர் சிலைகளுக்கு பொருத்தப்பட்ட கவசத்தில் இருந்து தங்கம் மாயமான விவகாரத்தை கண்டித்து முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கேரள இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை துரத்தி பிடித்து கைது செய்த போலீசார். இடம்: கொச்சி
12-10-2025 | 08:48
நச்சுத்தன்மை உடைய இருமல் மருந்தை குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தால் நாடே கலங்கிப்போயிருக்கிறது. ஆனால் இப்போது தான் மருந்தாய்வாளர்கள் மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இடம்: சிந்த்வாரா, மத்திய பிரதேசம்
12-10-2025 | 08:38