இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.இடம்: எம்.சி.சாலை.
15-10-2025 | 21:30
புதுச்சேரி அடுத்து பனித்திட்டு பகுதியில் விவசாயிகள் சாமந்தி மலர் சாகுபடி செய்துள்ளனர்.
15-10-2025 | 19:36
ஊட்டி ரயில்வே நிலையத்தில், காட்சிக்கு வைக்கப்பட்ட பழமையான நீராவி என்ஜின் முன்பு செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள் .
15-10-2025 | 13:10
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பரவலாக மழை பெய்து வந்த நிலையில் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளித்தது.
15-10-2025 | 09:35
ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள தேசிய பாதுகாப்பு படையான என்.எஸ்.ஜி. தலைமையகத்தில் நடந்த 41வது ஆண்டு விழாவில், கமாண்டோ வீரர் ஒருவர் எரியும் வளையத்தினுள் பாய்ந்து பாதுகாப்பு திறனை வெளிப்படுத்தினார்.
15-10-2025 | 06:51
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவையொட்டி புட்டபர்த்தியில், நவ.22ல் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருமாறு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் (இடது), டில்லியில் நேற்று சந்தித்து அழைப்பு விடுத்தார். அருகில் தினமலர் வெளியீட்டாளர் இல.ஆதிமூலம்.
15-10-2025 | 06:50