உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உடுமலை அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரில், ஆற்றிலுள்ள தரைப்பாலத்தில் வாகனங்களை வரிசையாக நிறுத்தி சுத்தம் செய்கின்றனர். இடம்: கொழுமம்.

16-10-2025 | 07:44


மேலும் இன்றைய போட்டோ

இந்தியர்களின் ஒளி வீசும் பண்டிகையான தீபாவளி, உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் உள்ள வணிக வளாகத்தில் பிரமாண்ட ரங்கோலி கோலம் போடப்பட்டு உள்ளது.

16-10-2025 | 07:41


உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் நம் ராணுவத்தின் திறன் மற்றும் பயிற்சிகளை பொதுமக்கள் முன் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஹெலிகாப்டர் படை பிரிவினர் நிகழ்த்திய சாகசம் பார்வையாளர்களை கவர்ந்தது.

16-10-2025 | 07:36


உத்தராகண்டின் ரிஷிகேஷில் பாயும் கங்கை நதியில் ரிவர் ராப்டிங் எனப்படும் ரப்பர் படகு சாகச பயணத்தில் ஈடுபட்ட சுற்றுலா பயணியர்.

16-10-2025 | 07:23


சில தினங்களாக பெய்த மழையால் விருதுநகர் அருகே பேராலி கண்மாய்க்கு நீர்வரத்து துவங்கியுள்ளது.

16-10-2025 | 07:09


தீபாவளி பண்டிகையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வடமாநில மக்கள் நேற்று புறப்பட்டு சென்றனர்.

16-10-2025 | 07:07


சிவகங்கையில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மினி மாரத்தான் நடைபெற்றது.

15-10-2025 | 21:30


சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.இடம்: எம்.சி.சாலை.

15-10-2025 | 21:30


புதுச்சேரி அடுத்து பனித்திட்டு பகுதியில் விவசாயிகள் சாமந்தி மலர் சாகுபடி செய்துள்ளனர்.

15-10-2025 | 19:36


விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் நடவு பணி முடிந்து பசுமையாக காட்சியளிக்கும் வயல்.

15-10-2025 | 18:43