உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி டவுன் பகுதியில் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்..

19-10-2025 | 18:20


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி நகராட்சியில் பெரும்பாலான வார்டுக்கு பார்சன்ஸ்வேலி அணையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. மேற்குதொடர்ச்சி மலை நீரோடையில் தண்ணீர் வரத்து காரணமாக மொத்த கொள்ளளவான 60 அடியில் நீர் ததும்பி காணப்படுவதால் கோடையை சமாளிக்கலாம்.

09-02-2026 | 08:41


திருவள்ளூர் சீத்தஞ்சேரி கூட்டுச்சாலையில் உயர்கோபுர மின்விளக்கு பழுது அடைந்ததால், இரவு நேரத்தில் அப்பகுதி கும்மிருட்டாக காணப்பட்டது. இது குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் உயர்கோபுர மின் விளக்கு சீரமைக்கப்பட்டது.

09-02-2026 | 08:37


சென்னை காசிமேடு பகுதியில் உள்ள படகு ஒன்றில் சவாரி செய்வது போல் அமர்ந்து உணவு தேடும் பறவைகள்.

09-02-2026 | 08:33


முன்னே செல்லும் வாகனங்களை எளிதாக கண்டறிய முடியாத அளவுக்கு பெய்த பனியில் மெதுவாக இயக்கப்பட்ட வாகனங்கள். இடம்: பேசின் பாலம், வியாசர்பாடி.

09-02-2026 | 08:20


உத்தரகண்டில் தற்போது பனிப்பொழிவு தீவிரமாக உள்ளது. இதனால் ருத்பிரயாக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் மூடப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்.

09-02-2026 | 07:50


பழங்குடியினரின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில், கடந்த ஆண்டு முதல் பண்டும் என்ற திருவிழா நடத்தப்படுகிறது. திருவிழாவில் கலைநிகழ்ச்சியில் பாரம்பரிய உடையில் பங்கேற்ற பழங்குடியின சிறுமி.

09-02-2026 | 07:46


திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அருகே தண்ணீரை தேடி உலா வந்த காட்டெருமைகள்..

08-02-2026 | 18:32


டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

08-02-2026 | 17:02


ஆரோவில் ஒற்றுமையை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விசிட்டர் சென்டரில் இருந்து மாரத்தான் ஓட்டம் நடந்தது

08-02-2026 | 17:02