இன்றைய போட்டோ
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் உள்ள அவரின் பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் 11வது உலக ஆன்மிக மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, முன்னதாக சத்ய சாய்பாபாவின் மஹா சமாதியில் மரியாதை செலுத்தினார்.
21-11-2025 | 07:09
மேலும் இன்றைய போட்டோ
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு அசாம் மாநிலத்தில் இருந்து பிஜிலி என்ற 5 வயது பெண் யானை வந்தது. மடத்தில் உள்ள மையத்தில் யானை பராமரிக்கப்படும் என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
26-09-2026 | 08:57
அனந்த் சதுர்தசி தினத்தில் விநாயகர் விசர்ஜனம் எனப்படும் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்தது. அதில் வண்ணப்பொடிகள் தூவி கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை.
26-09-2026 | 08:52
புதுச்சேரி உள்ளாட்சித் துறை தூய்மை பாரத இயக்கம்-நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் கீழ் கம்பன் கலை யரங்க வளாகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான கோலப்போட்டி நடந்தது.
25-09-2026 | 14:28
ஆபத்தான நிலையில் சாலையை கடக்கும் பொதுமக்கள்.இடம்: தே.மு.திக அலுவலகம் அருகே,கோயம்பேடு .
25-09-2026 | 14:25