இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலம் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ள நிலையில், பொதுமக்கள் தாங்களாகவே மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
11-12-2025 | 17:28
ஊட்டி போல் மாறியது கோவை ... கோவை காந்திபுரத்திலுள்ள செம்மொழி பூங்காவிற்கு வந்த பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பூக்களுடன் செல்பி எடுத்தனர்.
11-12-2025 | 17:27
பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர் ரவி மரியாதை செலுத்தினார்.
11-12-2025 | 17:27
பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஜதி பல்லக்கு ஊர்வலத்தை கவர்னர் ரவி கொடி அசைத்து துவக்கி வைத்தார்
11-12-2025 | 17:27
பூத்துக்குலுங்கும் பூக்களுக்கு நடுவே மாணவர்கள்...கோவை காந்திபுரத்திலுள்ள செம்மொழி பூங்காவிற்கு வந்த பள்ளி மாணவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பூக்களை பார்த்து ரசித்தனர்.
11-12-2025 | 17:25
சிலையாய் நீ சிற்பியாய் நான் என்று வர்ணிக்கலாம் இனி... கோவை காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்காவில் வைத்துள்ள சிற்பத்துடன் தன் மனைவியை புகைப்படம் எடுத்த வாலிபர்.
11-12-2025 | 17:25
மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மழை காலத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் கொசு உற்பத்தி குறித்து ஆய்வு நடத்தினர். இடம் :மீனம்பாக்கம்.
11-12-2025 | 17:24
பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஜதி பல்லக்கு ஊர்வலத்தை கவர்னர் ரவி துவக்கி வைத்தார். உடன் முன்னாள் தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி. தொழிலதிபர் வி.ஜி.பி. சந்தோஷம், முன்னாள் எம்எல்ஏ நடராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
11-12-2025 | 17:24