உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது.

26-12-2025 | 17:40


மேலும் இன்றைய போட்டோ

சென்னையில் தமிழ்நாடு நகர்ப்புற தூய்மை துணை சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இடம்: சுவாமி சிவானந்தா சாலை.

27-12-2025 | 12:58


நாமக்கல்லில் இருந்து நாகர்கோவிலுக்கு முட்டை லோடு ஏற்றி சென்ற மினி லாரி, விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் அருகே முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 60 ஆயிரம் முட்டைகள் உடைந்து வீணாகின.

27-12-2025 | 09:24


ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய சுனாமி பெரும் துயரம் நடந்து 21 ஆண்டுகளாகிறது. சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் கூடிய பொதுமக்கள் கடலில் பால் ஊற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

27-12-2025 | 09:20


வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்த நிலையில், சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில், குளித்து மகிழ்ந்தனர்.

27-12-2025 | 08:41


ஊட்டி அருகே சூட்டிங்மட்டம் காட்சி முனைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

27-12-2025 | 08:36


கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மனிதர்களை அச்சுறுத்தி வந்த 14 வயது ஆண் புலி கூண்டில் சிக்கியது.

27-12-2025 | 08:32


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை சிப்காட் தொழில் பூங்காவில் தைவான் நாட்டின் பவுசென் குழுமத்தைச் சேர்ந்த, 'ஹை க்ளோரி புட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் அமைக்கும் காலணிகள் உற்பத்தி ஆலை வடிவமைப்பை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். உடன் அமைச்சர்கள், வேலு, ராஜா மற்றும் காலணி உற்பத்தி ஆலை நிர்வாகிகள்.

27-12-2025 | 07:20


ஜனாதிபதி திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி சந்தித்தார். இடம்: ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.

26-12-2025 | 20:52


மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சியாக, சென்னை அமைந்தகரை அய்யாவு மஹாலில், நாராயணீயம் சிறப்பு சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில் அமைக்கப்பட்டுள்ள ஆண்டாள் திருக்கல்யாண சிறப்பு கண்காட்சி.

26-12-2025 | 20:26