உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவையை மிரட்டும் பனி மூட்டம் ட்ரோன் பார்வையில். இடம்: தடாகம் ரோடு.

26-12-2025 | 20:24


மேலும் இன்றைய போட்டோ

மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சியாக, சென்னை அமைந்தகரை அய்யாவு மஹாலில், நாராயணீயம் சிறப்பு சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில் அமைக்கப்பட்டுள்ள ஆண்டாள் திருக்கல்யாண சிறப்பு கண்காட்சி.

26-12-2025 | 20:26


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் நகராட்சி திடலில் அனைத்து துறை சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது

26-12-2025 | 20:25


சென்னை மயிலாப்பூரில் உள்ள ராகசுதா அரங்கத்தில் ஸ்ரீராம் குமார் கச்சேரி நடந்தது.

26-12-2025 | 20:25


திருப்பூர், ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் பனியன் தொழிலாளி சம்பளம் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் கலந்து கொண்ட ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள்.

26-12-2025 | 20:25


சென்னை மயிலாப்பூரில் உள்ள வித்தியபாரதி அரங்கத்தில் காயத்திரி வாய்ப்பாட்டு கச்சேரி நடந்தது.

26-12-2025 | 20:25


கோவை சுந்தராபுரம் குறிச்சியில் நடந்த அரவான் திருவிழாவில், மண்முக சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்த அரவான் மற்றும் பொம்மியம்மன்.

26-12-2025 | 20:25


தென்காசி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிசான நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில் மேக்கரை பகுதி முழுவது பச்சை பசேலென ரம்மியமாக காட்சியளிக்கின்றது...

26-12-2025 | 20:24


குன்றத்தூரில் உள்ள திருநாகேஸ்வரர் கோவில் குளம் வடகிழக்கு பருவ மழை கொட்டி தீர்த்த போதிலும் வறண்ட நிலையில் காணப்படுகிறது.

26-12-2025 | 20:24


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர் . இடம் : டி.பி.ஐ வளாகம், நுங்கம்பாக்கம், சென்னை

26-12-2025 | 17:42