இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
அந்திசாயும் வேளையில் செந்நிர கதிரவனின் அழகிய ஒளியை ரசிக்கும் பொதுமக்கள்.. இடம் திருநெல்வேலி.
29-12-2025 | 09:18
விழுப்புரத்தில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி பக்தர்கள் பிரசாதமாக வழங்க ஒரு லட்சம் லட்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
29-12-2025 | 09:18
குன்னூரில் காலை நேரத்தில் தொடரும் பனிமூட்டம் காரணமாக, தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது.
29-12-2025 | 07:16
உத்தரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பாவை நாட்டிய வைபவ நிகழ்ச்சியை யொட்டி, பாடல்களுக்கு ஏற்ப பள்ளி மாணவியர் நடனமாடினர்.
29-12-2025 | 07:10
நம் அண்டை நாடான மியான்மரில் நடந்த பார்லி தேர்தலுக்கான முதற்கட்ட ஓட்டுப்பதிவில் ஓட்டளிக்க ஆர்வத்துடன் காத்திருந்தவர்கள். இடம்: நய்பிடாவ்.
29-12-2025 | 07:06
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியின் போது, பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் தங்கள் பெயரை சேர்க்க காத்திருந்தோர். இடம்: கொல்கட்டா.
29-12-2025 | 07:00
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில, பறவைகள் இளைப்பாற வசதியாக, குட்டி தீவு போல் மாற்றியுள்ளது வனத்துறை. பறவைகள், மரங்கள் மற்றும் செடிகளுக்காக பள்ளம் தோண்டி தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது. இடம்: எல்காட் சாலை அருகே, சோழிங்கநல்லூர்.
29-12-2025 | 06:34