இன்றைய போட்டோ
நம் அண்டை நாடான சீனாவின் பாரம்பரிய நாள்காட்டியின் படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் பெயரால் குறிக்கப்படுவது வழக்கம். இதன்படி, வரும் 2026 குதிரை ஆண்டாக கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து அந்நாட்டு தலைநகர் பீஜிங்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பிரமாண்டமான குதிரை சிலை காட்சிப்படுத்தப் பட்டிருந்ததை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
30-12-2025 | 06:16
மேலும் இன்றைய போட்டோ
பல்லடம் தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் வரவேற்பிற்கு வைக்கப்பட்டிருந்த கரும்புகளை மகளிர் அணி தொண்டர்கள் தூக்கிச் சென்றனர்.
29-12-2025 | 22:34
பா.ஜ., சார்பில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் எனும் மாநாடு கோவை மலுமிச்சம்பட்டியில் நடந்தது. இதில் வள்ளி கும்மியாடிய பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை.
29-12-2025 | 22:23
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அக்கூர் கிராமத்தில் எழுச்சி பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பேசினார்.
29-12-2025 | 22:21
ரஷ்யாவில் மீட்கப்பட்ட மருத்துவர் ஜெகதீஷ் காமராஜை குடும்பத்தினர் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்
29-12-2025 | 22:20
தி.மு.க., மகளிரணி மாநாட்டிற்கு அரசு பஸ்கள் சென்றதால் பஸ்கள் இல்லாமல் பயணிகள் அவதியடைந்தனர். இடம் :கோவை காந்திபுரம் டவுன்பஸ் ஸ்டாண்ட்.
29-12-2025 | 22:19
திருச்சியில் திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோவில்களில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
29-12-2025 | 19:22