உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஆறாவது நாளாக நேற்று போராட்டம் நடத்தியவர்களை குண்டுகட்டாக காவல்துறையினர் கைது செய்தனர்.

31-12-2025 | 21:32


மேலும் இன்றைய போட்டோ

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி திருக்கோவிலில், மார்கழி மாதம் திருவாதிரையை முன்னிட்டு நடந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க அசைந்து வந்த தேர்.

02-01-2026 | 08:00


மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகர கிராமத்தில் பழமையான அந்தோணியார் சர்ச் உள்ளது. இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் மண்டியிட்டு தீச்சட்டி ஏந்தியும் வழிபாடு செய்தனர்.

02-01-2026 | 07:57


கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

02-01-2026 | 07:51


கேத்தி பாலாடா பகுதியில் காலை நேர பனிப்பொழிவின் போது, மலைகளின் மீது தவழ்ந்து செல்லும் மேக கூட்டங்கள் வண்ண மயமாய் காட்சி அளிக்கின்றன.

02-01-2026 | 07:48


புத்தாண்டை வரவேற்கும் விதமாக நேற்று மழை பெய்தது. இடம்: சென்னை- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, கும்மிடிப்பூண்டி.

02-01-2026 | 07:16


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சங்கரி யோகா மைய மாணவ-மாணவியர் புத்தாண்டை வரவேற்கும் விதமாக 2026 போல் யோகாசனத்தில் ஈடுபட்டனர்.

02-01-2026 | 07:11


செங்கல்பட்டு திருப்போரூர் பேரூராட்சி கிரிவல சாலையில் உள்ள சிறுவர் விளையாட்டு மையத்தில் இடையூறாக இருந்த ஜல்லி கற்கள் அகற்றப்பட்டு எம்-சாண்ட் கொட்டி சீரமைக்கப்பட்டது.

02-01-2026 | 07:07


கேரளாவின் கொச்சி கோட்டை மைதானத்தில், 2026ம் புத்தாண்டை முன்னிட்டு பிரமாண்ட 50 அடி உயர, பாப்பஞ்சி உருவ பொம்மை எரிக்கப்பட்ட தருணத்தின் போது பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடி மகிழ்ந்தனர். பாப்பஞ்சி என்றால் போர்ச்சுக்கீசிய மொழியில் தீமைகளின் மொத்த உருவம் என அர்த்தம்.

02-01-2026 | 06:23


திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில் மார்கழி உற்சவத்தை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

01-01-2026 | 22:56