இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் 14வது சர்வதேச மலர் கண்காட்சி நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் விண்வெளி சாதனையை போற்றும் வகையில், பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் மாதிரி ஆயிரக்கணக்கான வண்ண மலர்களால் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு உள்ளது. இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
03-01-2026 | 07:22
அவிநாசி, லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு அபிஷேகம் தொடங்கியது. (மஞ்சள் அபிஷேகம்)
03-01-2026 | 07:08
அவிநாசி, லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு அபிஷேகம் தொடங்கியது. (விபூதி அபிஷேகம்)
03-01-2026 | 07:08
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு 425 கிலோ எடையில் புதிதாக தயார் செய்யப்பட்ட வெள்ளித் தேர் வெள்ளோட்டம் நடந்தது.
02-01-2026 | 21:46
சென்னை பல்லவன் சாலை வழியாக பிராட்வே சென்ற 88.கே, மாநகரப் பேருந்து சாலையில் நடுவே பழுதடைந்து நின்றதால் ஓரம் கட்ட பஸ்ஸை மக்கள் தள்ளி சென்றனர்.
02-01-2026 | 21:45
சென்னை எழும்பூர் பகுதியில் 2024-நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கையில் தட்டேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
02-01-2026 | 21:44