இன்றைய போட்டோ
டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. இதில் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் இடமிருந்து வலம் - ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயலர் ரவிகுமார், துணைவேந்தர் கீதாலட்சுமி, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி சண்முகம், தமிழக பா.ஜ தலைவர் நயினார் நாகேந்திரன், பல்கலையின் தலைவர் அருண்குமார் மற்றும் பதிவாளர் பழனிவேலு. இடம்: ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், வேலப்பன்சாவடி.
02-01-2026 | 16:52
மேலும் இன்றைய போட்டோ
கூடலூர் பகுதியில் காலை நேரத்தில் மேகமூட்டம் தொடர்வதால், ஓட்டுனர்கள் முகப்பு விளக்கை பயன்படுத்தி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
03-01-2026 | 09:01
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
03-01-2026 | 08:59
ஸ்ரீபெரும்புதூர்- சிங்க பெருமாள் கோவில் இணைப்பு சாலை சேதமடைந்து பள்ளமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்த செய்தி நம் நாளிதழிலில் வெளியானதை அடுத்து, நெடுஞ்சாலை துறையினர் சாலை நடுவே உள்ள பள்ளங்களில் ஜல்லி கொட்டி சீரமைத்தனர்.
03-01-2026 | 08:44
ராபத்து உத்சவத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், மலர் அலங்காரத்தில் கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
03-01-2026 | 08:27
ஒளியும் தாமரையும்: விழித்தெழுந்தவரின் புனிதப் பொருட்கள் என்ற தலைப்பிலான புத்தரின் புனித சின்னங்கள் மற்றும் பழங்கால பொருட்களை உள்ளடக்கிய பிரமாண்டக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 03) திறந்து வைக்கிறார். இதில் நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு மீண்டும் தாயகம் கொண்டு வரப்பட்ட புனிதப்பொருட்கள், பெட்டகங்கள் மற்றும் ரத்தினக் கற்கள் இடம்பெறுகின்றன. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஒரு சிறிய குகை போன்ற நுழைவாயிலுடன் கூடிய அரைவட்ட வடிவ ஸ்தூபி.
03-01-2026 | 07:31
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் 14வது சர்வதேச மலர் கண்காட்சி நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் விண்வெளி சாதனையை போற்றும் வகையில், பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் மாதிரி ஆயிரக்கணக்கான வண்ண மலர்களால் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு உள்ளது. இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
03-01-2026 | 07:22