இன்றைய போட்டோ
கோவையில், தினமலர் சார்பில் பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சியை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார். அருகில் (இடமிருந்து) மான்செஸ்டர் இன்ஸ்டிட்யூட் சிஇஓ ராஜேஷ் வாசுதேவன், எஸ்எஸ்விஎம் பள்ளி நிர்வாக அறங்காவலர் மோகன்தாஸ், அத்வைத் தாட் அகாடமி முதல்வர் குமாரி பத்மினி, நேஷனல் மாடல் பள்ளி தாளாளர் மோகன் சந்தர், சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி முதல்வர் கருணாம்பிகேஸ்வரி.
03-01-2026 | 12:02
மேலும் இன்றைய போட்டோ
புதுச்சேரி சட்டசபை தேர்தல் காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்.
09-04-2026 | 11:38
சட்டசபை தேர்தலில் வரும் ஏப்ரல் 23ல் வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கல்லூரி மாணவியர், தங்கள் முகத்தில் வண்ண ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
09-04-2026 | 06:56
சென்னை வேளச்சேரியில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்க்கு அத்தொகுதியின் வேட்பாளர் அசோக், கூலிங் கிளாஸ் அணிவித்து முத்தம் கொடுத்தார்.
09-04-2026 | 06:49
வடகிழக்கு மாநிலமான அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அதிகாரிகள். இடம்: குவஹாத்தி.
09-04-2026 | 06:43
செய்தி: நடிகர் விஜய்க்கு, எம்ஜிஆர்- அதிமுக ஆதரவு தெரிவிப்பு. படம் பார்த்து உங்களது கருத்தை சொல்லுங்கள்.
09-04-2026 | 06:32
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி இளங்காக்கூரில் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கடந்த 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாதது குறித்து கிராமத்தினர் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
09-04-2026 | 06:25