இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஆர்.இ.சி., முன்னாள் மாணவர்கள் பொன்விழா சந்திப்பு! : திருச்சியில், 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' என பெயர் மாற்றப்பட்ட, அப்போதைய ஆர்.இ.சி., எனும் ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரியில், 1971 - 76ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் மூன்று நாள் பொன்விழா சந்திப்பு, மாமல்லபுரத்தில் நேற்று நிறைவடைந்தது. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கல்லுாரியின் கணிதத் துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் கருப்பன் செட்டி, அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவ நிபுணர் பால் பழனியப்பன் ஆகியோருடன் முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
24-01-2026 | 05:28
கோவை ராம்நகர் காட்டூர் டாக்டர் ராஜரத்தினம் தெருவில் உள்ள ஆட்டோமொபைல் உதிரிபாகம் கடையில் ஏற்பட்ட பயங்கர தீயினால் ஏற்பட்ட கரும்புகை பல கிலோமீட்டர் தூரம் வரை தென்பட்டது.
23-01-2026 | 23:02
கோவை காந்திபுரம் செம்மொழி பூங்கா வளாகத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மதி அனுபவ அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்ட பொதுமக்கள்.
23-01-2026 | 22:58
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் ராஜஸ்தான் மாநில ஒத்திகை கலை நிகழ்ச்சி நடந்தது.
23-01-2026 | 21:36
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேனியில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்ற மாணவிகள்.
23-01-2026 | 21:35