உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தேசிய காப்பீட்டு நிறுவனம் சார்பில் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

27-01-2026 | 12:54


மேலும் இன்றைய போட்டோ

கோவை சிங்காநல்லூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு உற்சவ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஸ்ரீதேவி பூதேவி சமேத உலகளந்த பெருமாள்.

07-06-2026 | 23:13


சென்னை புதுப்பேட்டை லாங்க்ஸ் கார்டன் சாலையில் நாய்கள் ஆர்வலர்கள் செல்லப் பிராணிகளை காப்போம் என்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

07-06-2026 | 23:11


சென்னை பெசன்ட்நகர் ஊரூர் குப்பம் - ஆல்காட் குப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலின் கும்பாபிஷேகத்தை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று நடத்தி வைத்தார்.

07-06-2026 | 23:10


தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் துவங்கி விட்ட நிலையில் ஐந்தருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

07-06-2026 | 23:09


உலக மிதிவண்டி தினத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் நடந்த சைக்கிள் பேரணி நேரு விளையாட்டு அரங்கில் இருந்து கொடி அசைத்து துவங்கி வைக்கப்பட்டது.

07-06-2026 | 23:09


விசைப்படகுகளின் தரைத்தளத்தில் உள்ள சேமிப்பு அறைகளில், இயந்திரம் மூலம் துாளாக்கப்பட்ட ஐஸ், இருப்பு வைக்கும் பணி நடக்கிறது. இடம். காசிமேடு.

07-06-2026 | 23:07


தேசிய விலங்குகள் உரிமைகள் தினத்தை முன்னிட்டு சென்னை சிவானந்தா சாலையில் விலங்குகள் ஆர்வலர்கள் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.

07-06-2026 | 23:07


தினமலர் பிரீமியர் லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பார்க்லே இந்தியா அணிக்கு நம்மபேமிலி குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் கார்த்திக் பொன்னுசாமி கோப்பையை வழங்கினார். இடம்: மேடவாக்கம், சென்னை.

07-06-2026 | 23:06


ஊட்டி அருகே கல்லட்டி வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது.

06-06-2026 | 16:36