இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.
10-02-2026 | 14:13
பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு, கோவை வெரைட்டி ஹால் ரோடு பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
10-02-2026 | 14:11
சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரி, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.
10-02-2026 | 14:10
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சார்பில் கண்களில் கருப்பு துணிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10-02-2026 | 14:09
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூத்த தம்பதியினரை சிறப்பிக்கும் விழா நடந்தது. இடம்: வேப்பேரி, சென்னை.
10-02-2026 | 14:09
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடம். காமராஜர் சாலை, சென்னை.
10-02-2026 | 14:08
பிளஸ் 2 செயல்முறைத் தேர்வுகள் நேற்று துவங்கின. திருப்பூர் , ஜெய்வாபாய் பள்ளியில் மனையியல் பிரிவு செய்முறைத் தேர்வில் பங்கேற்ற மாணவியர் பிரைடு ரைஸ், பிரட் ஆம்லெட், வெஜ் பிரியாணி, வெஜிடபிள் புலாவ் பிரைடு ரைஸ் என பலவகை உணவு பதார்த்தங்களை மணக்க, மணக்கத் தயாரித்தனர்.
10-02-2026 | 09:31