இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
காதலர் தினம் (நாளை பிப்ரவரி 14) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கோயம்பேடு பூ சந்தையில், கண்களை கவரும் விதமாக ரோஜா பூக்கள் மற்றும் வண்ணமயமான மலர்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.
13-02-2026 | 06:49
காஞ்சிபுரம் திருக்காலிமேடு அருந்ததியர் நகர் 2வது தெருவில் கழிவுநீர் கால்வாய் மண் திட்டுகளால் தூர்ந்து இருந்தது. இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மண் திட்டுகளால் தூர்ந்த கால்வாயை தூர்வாரி சீரமைத்தனர்.
13-02-2026 | 06:44
சார் இது எங்க ஏரியா ஹெல்மெட் எல்லாம் போட்டு இருக்கிறேன் முதல்வர் வருவதற்கு முன்பாக ஒரு ரவுண்டு போயிட்டு வருகிறேன் என்கிறாரோ இந்த சிறுவன்?.இடம்: கொருக்குப்பேட்டை.
12-02-2026 | 16:32
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன் இடமிருந்து வலம் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, எம்.எல்.ஏ. எபினேசர்.
12-02-2026 | 16:32
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ரோடு மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்த மண்டபத்திற்கு அழைத்து சென்ற போது ஆபத்தான முறையில் படியில் பயணம் செய்த போலீசார்.
12-02-2026 | 16:31
காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே கள்ளத்திகுளம் பகுதியில் ரோஜாக்களை விற்பனைக்கு கொண்டுசெல்ல பறிக்கும் விவசாயி..
12-02-2026 | 16:22
சிவகங்கையில் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
12-02-2026 | 16:22