உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தே.மு.தி.க அலுவலகத்திற்கு விருப்ப மனு வாங்க வந்த அக்கட்சியினர் சாலையிலேயே வாகனங்களை விட்டுச் சென்றதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடம்: கோயம்பேடு .

11-02-2026 | 16:36


மேலும் இன்றைய போட்டோ

கலைமகள் இலக்கிய மாத இதழின், 95வது ஆண்டு விழாவின், சிறப்பு மலரை ஏசியன் பெயிண்ட்ஸ் சேர்மன் ஆர். சேஷசாயி வெளியிட, முதல் பிரதியை தினமலர் நாளிதழின் இணை ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி பெற்றுக்கொண்டார். உடன் இடமிருந்து: கலைமகள் பதிப்பாளர் பி. டி. டி. ராஜன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர் கே. ஜி. ரகுநாதன். இடம்: ஆழ்வார்பேட்டை.

14-02-2026 | 21:08


மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் ஆராய்ச்சி, தொழில், தொடக்க மற்றும் தொழில் முனைவோர் மாநாடு 2026 சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. உடன் இடமிருந்து, புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் ரவிச்சந்திரன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் கலைச்செல்வி.இடம் : நந்தம்பாக்கம்

14-02-2026 | 21:07


விழுப்புரம் ஆதிவாலீஸ்வர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சந்தன அபிஷேகம் நடந்தது.

14-02-2026 | 21:03


சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கூட்டம்.

14-02-2026 | 21:03


திருவான்மியூர் பிரபுபாதரின் இஸ்கான் சார்பில், 15ம் ஆண்டு ரத யாத்திரை வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். இடம்: அடையாறு.

14-02-2026 | 21:03


மகா சிவராத்திரியை முன்னிட்டு கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்றுகளுக்கு நாட்டியஞ்சலி அறக்கட்டளை நிறுவனர் சூசைராஜ் சான்றிதழ் வழங்கினார்.

14-02-2026 | 20:30


கோவை பார் அசோசியேஷன் சார்பில் மாரத்தான் ஓட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து துவங்கியது

14-02-2026 | 20:05


வண்டலூர் பூங்காவை கண்டுகளிக்கும் பள்ளி மாணவர்கள்

14-02-2026 | 20:04


கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று 27ஆவது ஆண்டு ரிலரிக்கல்ஸ் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகை ஸ்ரீ லீலா.

14-02-2026 | 20:04