உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சார் இது எங்க ஏரியா ஹெல்மெட் எல்லாம் போட்டு இருக்கிறேன் முதல்வர் வருவதற்கு முன்பாக ஒரு ரவுண்டு போயிட்டு வருகிறேன் என்கிறாரோ இந்த சிறுவன்?.இடம்: கொருக்குப்பேட்டை.

12-02-2026 | 16:32


மேலும் இன்றைய போட்டோ

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2019 பிப்ரவரி 14ல் பாக் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உயிரிழந்த வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பொதுமக்கள்.

15-02-2026 | 08:30


ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் இளைஞர்களை நான்கு ஆண்டுகள் பணியில் சேர்க்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் நம் ஆயுதப்படைக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடந்தது. இதில் பங்கேற்ற இளைஞரின் மார்பளவை அளவிட்ட அதிகாரி. இடம்: லக்னோ, உத்தரபிரதேசம்.

15-02-2026 | 08:16


இன்னும் சில நாட்களில் பனிப்பொழிவு முடிவடைய உள்ள நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள சோலாங் பள்ளத்தாக்கில் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.

15-02-2026 | 06:58


உலக நன்மை வேண்டி டெல்லியில் உள்ள திருப்பதி பாலாஜி கோயிலில் திருக்கல்யாண விழா நடந்தது அலங்கார கோலத்தில் பெருமாளுடன் ஸ்ரீதேவி பூமாதேவி அலங்கார கோலத்தில் எழுந்தருளினர்

15-02-2026 | 05:19


கலைமகள் இலக்கிய மாத இதழின், 95வது ஆண்டு விழாவின், சிறப்பு மலரை ஏசியன் பெயிண்ட்ஸ் சேர்மன் ஆர். சேஷசாயி வெளியிட, முதல் பிரதியை தினமலர் நாளிதழின் இணை ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி பெற்றுக்கொண்டார். உடன் இடமிருந்து: கலைமகள் பதிப்பாளர் பி. டி. டி. ராஜன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர் கே. ஜி. ரகுநாதன். இடம்: ஆழ்வார்பேட்டை.

14-02-2026 | 21:08


மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் ஆராய்ச்சி, தொழில், தொடக்க மற்றும் தொழில் முனைவோர் மாநாடு 2026 சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. உடன் இடமிருந்து, புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் ரவிச்சந்திரன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் கலைச்செல்வி.இடம் : நந்தம்பாக்கம்

14-02-2026 | 21:07


விழுப்புரம் ஆதிவாலீஸ்வர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சந்தன அபிஷேகம் நடந்தது.

14-02-2026 | 21:03


சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கூட்டம்.

14-02-2026 | 21:03


திருவான்மியூர் பிரபுபாதரின் இஸ்கான் சார்பில், 15ம் ஆண்டு ரத யாத்திரை வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். இடம்: அடையாறு.

14-02-2026 | 21:03